கட்டுரை

சிறுசேமிப்பு கட்டுரை -siru semippu katturai in tamil -Essay on Small Savings

சிறுசேமிப்பு கட்டுரை -siru semippu katturai in tamil -Essay on Small Savings :- சிறுதுளி பெருவெள்ளம் என்றொரு பழமொழி உண்டு அதற்கேற்ப சிறு சேமிப்பின் தொடக்கமே வழமையான ஒரு எதிர்காலத்திற்கு ஆரம்பமாகும் .

சிறுசேமிப்பு கட்டுரை

இன்றைய கால கட்டத்தில் அதிக பொருள் ஈட்டுவதை விட அதை பேணி காப்பதே ஒவ்வொருவது முதல் கடமையாக பார்க்க படுகிறது ,நாம் சேமிக்கும் சிறுபணமானது இன்றைய விலைவாசிக்கு இணையாக ஒப்பிடும்போது மிக சொற்பமாக தோணலாம் இருந்த போதிலும் ,ஒவ்வொரு நாணயமும் அதன் மதிப்பை எப்போதும் இழப்பதில்லை என்ற கூற்றிற்ற்கு எப்போதும் மரியாதை உண்டு

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்பிக்கும் பெற்றோரின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சிறு சேமிப்பே ஆகும் ,ஏனென்றால் சேமித்து வைக்கும் பழக்கத்தை பயின்ற ஒரு குழந்தை தனது வாழ்வில் மிக முக்கிய பாடத்தை பயின்று விட்டதாகவே கூறலாம்.

சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் நோக்குடன் அரசு பலதரப்பட்ட சேமிப்பு திட்டங்களை தொடங்கி ஆதரித்து வருகிறது ,வங்கிகள் மட்டுமே நமது பணத்தை சேமிக்கும் இடம் என்ற நிலையை தாண்டி ,தபால் துறை ,காப்பீட்டு நிறுவனம் போன்ற துறைகளிலும் சேமிப்பு திட்டங்கள் தொடங்க பட்டு நடைமுறையில் உள்ளன

சிறு உண்டியலில் தொடங்கும் சிறி சேமிப்பு பழக்கத்தை வங்கி அல்லது தபால் நிலைய சிறு சேமிப்பு கணக்கை நிர்வகிக்கும் திறனுடைய குழந்தையாக மாற்றிவிட்டால் அந்த குழந்தைக்கு எப்போதும் பண தட்டுப்பாடின்றி வாழும் கலையை பயிற்றுவித்த திருப்தி நமக்கு கிடைக்கும்

குழந்தைகளின் எதிர்கால செலவுகளை அவர்களது பொறுப்பில் விடும் இந்த சிறுசேமிப்பு பழக்கம் பின் நாட்களின் அவர்களுக்கு மிக பெரிய சொத்தாக அமையும் .ஒவ்வொரு சிறு சேமிப்பு கணக்கிலும் நமது பணத்திற்கு வட்டியும் அதற்கான சலுகைகளையும் அரசு கொடுக்கிறது .எந்த வகையான சிறுசேமிப்பக இருந்தாலும் சேமிப்பு என்ற ஒற்றை சொல்லின் அர்த்தம் விளங்கிய குழந்தைகள் எப்போதும் ஒரு படி மேலாகவே இருக்கின்றனர்

Related Articles

Back to top button