கட்டுரை

Suthanthira Thinam Katturai in Tamil |independence day Katturai in Tamil

பல தலைவர்கள் மற்றும் சாமானியர்களின் தியாகங்களுக்கு மத்தியில் ஆகஸ்ட் 15 1947இல் இந்தியா தனது சுதந்திரத்தை பெற்றது

Suthanthira Thinam Katturai in Tamil |independence day Katturai in Tamil:- சுதந்திர தினம் நமது நாட்டில் முக்கியமான தினமாகும்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் நாள் நாம் நமது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம் .எத்தனயோ தியாகங்களுக்கு இடர்பாடுகளுக்கும் இடையில் நாம் பெற்ற இந்த சுதந்திரத்தை பேணிக்காப்பதும் அதை போற்றி வணங்குவதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமையாகும்

கிட்ட தட்ட இருநூறு வருடங்களாக நாம் அந்நிய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தோம் ,உலகம் முழுவதும் தமது காலனித்துவ எல்லையை விரிவு படுத்தும் முனைப்பில் இருந்த பிரிட்டிஷாரின் நயவஞ்சகம் மற்றும் கொடூர தாக்குதலில் நமது தேசம் தனது சுதந்திரத்தை இழந்து தவித்து வந்தது.பல வருடங்களாக பலர் தமது சுதந்திரத்திற்க்காக போராடியும் அதற்காக மடிந்தும் வந்தனர் இதற்கு காரணமாக சொல்லப்படுவது ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் ,இந்திய மன்னர்களின் ஒற்றுமையற்ற போக்குமே ஆகும்

பல தலைவர்கள் மற்றும் சாமானியர்களின் தியாகங்களுக்கு மத்தியில் ஆகஸ்ட் 15 1947இல் இந்தியா தனது சுதந்திரத்தை பெற்றது .இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமையும் தனது மனப்போக்கில் கட்டுக்கோப்புடும் வாழும் உரிமையும் உண்டு ,அந்த உரிமைகளை நமக்கு பெற்று தந்த இந்த நல்ல நாளை நாம் நமது பண்டிகைகளை கொண்டாடுவது போன்று கொண்டாடி வருகிறோம்

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி

இந்திய சுதந்திர போராட்டம் தான் உலக சரித்திரத்தில் மிக நீண்ட சுதந்திர போராட்டமாக கருதப்படுகிறது ,ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை கைப்பற்ற ஆரம்பித்த காலம் தொட்டே இந்த போராட்டம் தொடங்கிவிட்டது ,ஒருவர் பின் ஒருவராக இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றனர் ,அரசியல் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் மற்றும் அதற்கு உறுதுணையாக அதில் இணைந்த காந்தி போன்றோரின் துணிச்சலான நடவடிக்கைகள் மூலமாகவும் ,புதிய போர் முறையான காந்தியின் அறவழி போராட்டமான சத்தியாகிரக போராட்டம் அனைத்திற்கும் திருப்புமுனையாகவும் ,இறுதி போறாகவும் அமைந்து நமக்கு சுதந்திரம் கிடைத்தது

இருந்த போதிலும் இந்த சுதந்திர போராட்டத்தில் தமது உயிர்,மானம் ,உடமைகள் ,உற்றார் உறவினர்கள் என அவர்கள் இழந்தது எத்துணையோ ,எந்த ஒரு சுய நோக்கமும் இல்லாமல் சுதந்திர இந்தியா என்பதை மட்டும் தனது குறிக்கோளாக கொண்டு போறாடி வெற்றி பெற்ற அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு வீர வணக்கமும் அஞ்சலியும் இந்த திரு நாளில் நாம் செய்கிறோம்

பெண் சுதந்திர போராட்ட வீரர்கள்

உலகளவில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் வீரர்கள் பட்டியலில் நமது சுதந்திர போராட்ட பெண் போராளிகளே அதிகம் உள்ளனர் ,முந்தய காலகட்டங்களில் அரசியாக இருந்தும் போராட்டத்தின் பின்னாட்களில் சத்தியாகிரகம் கடைபிடித்தும் நிறைய பெண்கள் தங்களது உயிர் நீத்துள்ளனர்

சுதந்திர தின கொண்டாட்டம்

இந்திய அரசு மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து கொண்டாடி வருகிறது .ஒவ்வொரு குடிமகனும் தனக்கு கிடைத்த இந்த சுதந்திரத்தை பேணிக்காக்கும் முனைப்புடன் இந்த விழாவை கொண்டாடுகின்றனர் .அதே சமயத்தில் சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் சுதந்திர போராட்ட பாதிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் தினமாகவும் இதை கொண்டாடலாம் .

விழாவின் முக்கிய செயலா கொடியேற்றும் நிகழ்ச்சியை நிகழ்த்தி நமது தேசிய கோடியை பற்றியும் சுதந்திர தின போராட்டம் பற்றியும் உரை நிகழ்த்துவதும் ,மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டி போன்றவற்றை நடத்தி மாணவர்களுக்கு சுதந்திரமற்ற காலத்தின் இன்னல்களை புரிய வைப்பதும் இந்த விழாவில் சிறப்பம்சங்களாகும்

Related Articles

Back to top button