செய்திகள்விளையாட்டு செய்திகள்

வெளுத்து வாங்கிய சிவம் துபே ,அதிர்ந்த வாங்கடே மைதானம்

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தார் சிவம் துபே

சிக்சர் துபே என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் பாராட்டப்படும் சிவம் துபே மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஒரே ஓவரில் 15 ரன்கள் குவித்தார்

இதன் மூலம் முதல்நிலை பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்க பட்டது .

வரும் உலக கோப்பை t20 அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக சிவம் துபே இடம்பெறலாம் என்ற நிலை இருக்கும்போது ,ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சு திறமையே துபே வை விட முன்னிலை படுத்தும் விதமாக இருந்தது ,ஆனால் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவின் சறுக்கல் துபே விற்கு பெரிய பலமாக மாறிவிட்டது

தற்சமயம் சிவம் துபே பந்து வீசாவிட்டாலும் அவர் வேகப் பந்துவீச்சாளர் ஆவார்.

நேற்றய பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க வீரர்கள் ரஹானே 5, ரச்சின் 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ருதுராஜ், சிவம் துபே இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். 

சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் எளிதாக சிக்ஸ் அடிக்கும் துபே பிட்சில் இருந்ததால் மற்ற சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் கொடுக்காமல், அதை ஈடுகட்ட தானே பந்து வீசினார்.

ஆனால், எதிர்பார்த்தபடி சிக்ஸர் அடிக்காவிட்டாலும் ஹர்திக் வீசிய முதல் ஓவரிலேயே சிவம் துவே மூன்று ஃபோர் அடித்து 15 ரன்கள் குவித்து அவருக்கு அழுத்தம் கொடுத்தார்.

அதன் பின் தொடர்ந்து பந்து வீசிய ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

அதே நம்பிக்கையில் இனிங்சின் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் டேரில் மிட்செல் விக்கெட்டை வீழ்த்திய போதும் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸரால் 26 ரன்களை வாரிக் கொடுத்தார் பாண்டியா.

இறுதியாக 3 ஓவர்கள் வீசிய பாண்டியா 2 விக்கெட்கள் எடுத்து 43 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார்.அதேவேளையில் அதே சமயம், சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல்இருந்தார் .

சிவம் துபேவின் பலவீனமாக சொல்லப்பட்ட வேகப் பந்துவீச்சை நேற்று அவர் சமாளித்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்ததும் பரவலாக விமர்சகர்களால் பாராட்ட பட்டது

மறுபுறம் பேட்டிங்கிலும் சொதப்பினார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணியின் சேஸிங்கில் 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Related Articles

Back to top button