கட்டுரை

தொலைக்காட்சி நன்மை தீமைகள் கட்டுரை

நமது அன்றாட வாழ்வில் அனைத்து வீடுகளிலும் பொதுவான ஒரு பொருளாக தொலைக்காட்சி அமைந்துவிட்டது

 ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி   நமக்கு உடனுக்குடன் உலக செய்திகளை நமது வரவேற்பறைக்கு கொண்டுவந்து சேர்க்கிறது இருந்தபோதிலும் தொலைக்காட்சியை நான் பயன்படுத்துவதிலிருந்து அதிக நன்மைகள் கிடைத்த போதிலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன மனித கலாச்சாரத்தில் தொலைக்காட்சி அறிமுகமான பிறகு மனிதர்களிடையே தனிமையான ஒரு சூழ்நிலை உருவானது என்பது மறுக்க முடியாத உண்மையாக அமைந்துவிட்டது எனவே நாம் இந்த கட்டுரையில் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தொலைக்காட்சியின் நன்மைகள் மற்றும் தீமைகளை நாம் காணலாம்

தொலைக்காட்சியின் நன்மைகள்

 தொலைக்காட்சி நமக்கு உலக அளவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்துகிறது

பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சி மிகப்பெரிய ஒரு சாதனமாகும் திரைப்படங்கள் உலக சரித்திர நிகழ்வுகள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நாம் வீட்டில் இருந்தபடியே மிகக் குறைந்த செலவில் கண்டு களிக்கலாம்

 தற்போதைய காலகட்டத்தில் அதிகப்படியான தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் உடனுக்குடன் புதிய திரைப்படங்களும் தினசரி நாடகங்களும் ஒளிபரப்புகின்றன இதனால் வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு எப்போதும் ஒரு உறுதுணையாக தொலைக்காட்சி இருக்கிறது

 குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் கல்வி போதிக்கும் குருவாகவும் தொலைக்காட்சியை இருக்கிறது இந்த காலகட்டத்தில் கூட தமிழக அரசு தனியாக ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு வாயிலாக பாடம் நடத்துவதை நாம் கண்கூடாகக் கண்டோம்

 உலக அளவில் நடைபெறும் நிகழ்வுகளையும் அறிவியல் ஆராய்ச்சிகளில் அறிவியல் சாதனைகளையும் நாம் நமது வீட்டில் இருந்தபடியே கண்டு களிக்க முடிகிறது

 உடனுக்குடன்  தொலைக்காட்சி செய்தி மிகவும்  உதவிகரமாக இருக்கிறது

 மற்ற நாடுகளில் நடக்கும் விளையாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் ஆக நேரலையில் தொலைக்காட்சி மூலம் நாம் காணலாம்

 குழந்தைகளுக்கு விவாத கேள்வி தொலைக்காட்சிகளில் அவர் அறிவு வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது

 பெற்றோர்களுக்கு தொந்தரவு தரும் சுட்டிக் குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்கள் நிறைய வந்துவிட்டன அவற்றை கண்டுகளிக்கும் நடக்க பழகிய குழந்தைகள் மிக விரைவில் பேசப் பழகுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது

 தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய தொலைக்காட்சி பெட்டிகள் வைத்திருக்கிறது சமூக அந்தஸ்து ஆகவே மாறிவிட்டது குறிப்பாக எல்சிடி எல்இடி பிளாஸ்மா போன்ற விலை உயர்ந்த தொலைக் காட்சிகளை நமது வீட்டு வரவேற்பறையில் வைத்திருப்பது சாதாரண ஒரு காரியமாக மாறிவிட்டது

 தொலைக்காட்சி இணைப்பாக கூடுதல் இணைப்பாக இணையம் மற்றும் அனைத்து வரிகளும் தொலைக்காட்சிகளில் தற்போது வந்துவிட்டன தொலைக்காட்சி மூலமாகவே ஒருவர் இணைய இணைப்பு கொண்டு இணையத்தில் வலம் வரலாம்

 தொலைக்காட்சி தீமைகள்

 நன்மை பயக்கும் பல நிகழ்ச்சிகளை நாம் தொலைக்காட்சியில் கண்டாலும் தேவையில்லாத நிகழ்வுகளும் செய்திகளும் நம்மை வந்தடைவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது

 தொல்லை தரும் விளம்பரங்கள் நடைமுறைக்கு ஒத்துவராத செய்தி திணிப்புகள் நம் குழந்தைகளுக்கு இலகுவாக சென்றடைகின்றன

  தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணும் குழந்தைகள் தனிப்பட்ட மன நிலைக்கு தள்ளப்படுகின்றனர்

 எப்போதும் தொலைக்காட்சிகள் மூழ்கியிருக்கும் நபர்களால்   அக்கம்பக்கத்தார் இன் இயல்பான நட்புகள் கூட கிடைப்பது கிடையாது

 அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதினால் கன்பார்ம் அதுமட்டுமல்லாது மூளைக் கோளாறுகள் கூட தற்போது ஏற்படுகின்றன

 சமூக அந்தஸ்து என கிடைக்கும் பணத்தை எல்லாம் விலையுயர்ந்த தொலைக்காட்சிகள் வாங்கியதில் செலவிடுவது ஒரு தவறான விஷயமாகும்

 குழந்தைகளை அதிகம் தொலைக்காட்சியை காண வைப்பது அவர்களை மற்ற நிகழ்வுகளில் ஈடுபட இயலாமல் ஆகிவிடுகின்றது

 விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற நிகழ்வுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தாமல் தொலைக்காட்சி ஒரே இடத்தில் அவர்களை முடக்குகிறது

Related Articles

Back to top button