கட்டுரை
5g நன்மை தீமைகள் – 5g Pros and Cons
5g நன்மை தீமைகள் – 5g Pros and Cons :- தொலைதொடர்பு துறையில் உயரிய கண்டுபிடிப்பாக நமது கைகளில் தவழும் செல் பேசியை குறிப்பிடலாம் ,அந்த செல்பேசிக்கு இணைப்பு வழங்க பயன்படுத்தப்படும் தொழிநுட்பம் ஐந்தாவது தலைமுறையை எட்டிவிட்டது,அதன் காரணமாக மின்னல் வேக இணைய இணைப்பு ,துல்லியமான அலைபேசி அழைப்புகள் என உயர் ரக நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன ,இருந்த போதிலும் தொழில்நுட்ப வளர்ச்சி பல பாதிப்புகளையும் கொடுக்கிறது என்பதில் ஐயமில்லை ,எனவே நாம் இன்று 5g தொழில்நுட்பத்தின் நன்மை தீமைகளை பற்றி காணலாம்
5g தொழில்நுட்பத்தின் நன்மை
- அதிவேக இணைய இணைப்பு , 3 ஜிபி அளவுடைய மிக துல்லியமான திரைப்படத்தை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 20 வினாடிகளுக்குள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்
- வளையொலியில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யாமலேயே எந்த வித இடையூறும் இல்லாமல் காண முடியும்
- தொடர் இணைப்பு சாத்தியமாகிறது
- அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவை (Artificial Inteligence – AI ) தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க முடிகிறது
- வாகனங்களை துல்லியமா அல்லது சுயமாக இயங்க வைக்க தேவையான தகவல்களை அதிவேகமாக கடத்த உதவுகிறது
- கிளவுட் கம்ப்யூட்டிங் (cloud computing) என்ற வசதி மூலமாக தனி ஒருவரது செல்லிடை பேசி ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையமாக செயல்பட முடிகிறது
- கணினி மற்றும் செல் பேசிகளில் போதிய இடமில்லாமல் போகும் என்ற அச்சம் இனி தேவைப்படாது ஏனென்றால் ,அதில் பதிவாகும் தகவல்கள் ,புகைப்படங்கள் ,காணொளிகள் துரிதமாக இணைய சேகரத்தில் சேமிக்க முடிகிறது
- ஒரு இணைய இணைப்பு தானியங்கி வீடு உபயோக பொருட்கள் ,மற்றும் கணினி மையங்களை இணைக்கிறது
5g தொழில்நுட்பத்தின் நன்மை
- எந்த ஒரு தொழில்நுட்பம் தொடங்கும் போதும் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் இந்த தொழில்நுட்பத்திலும் உண்டு உதாரணமாக அனைத்து இடங்களுக்கும் இவற்றை பயன்பாட்டிற்கு அமைக்க பழைய முறை உதவவில்லை
- 4g தொழில்நுட்பம் போல அதிக தூரத்திற்கு அதன் முனையம் (கோபுரம்- Tower ) செயல் படவில்லை ,இதன் காரணமாக ஒவ்வொரு பகுதிக்கும் புதிய முனையம் (கோபுரம்- Tower ) அமைப்பது இன்றியமைத்ததாகிறது
- 5 g தொழில் நுட்பத்தை பெற புதிய இணைப்பு கருவிகள் வாங்க வேண்டும்
- தொடர் இணைப்பில் இருக்கும் பொது அதீத பேட்டரிகள் பயன்பாடுகள் தேவை படுகிறது
- தவறான தகவல்கள் அல்லது தேவையில்லாத தகவல்கள் சில வினாடிக்குள் இணையத்தை அடைந்து விடுவதால் ,அதன் பிறகே அதை சரிபார்க்க முடிகிறது
- அறிவியலை தவறான செயல்களில் பயன்படுத்துவோர் சில வினாடிகளில் நமது தகவல்களை பெருமளவு களவு செய்ய முடிகிறது
- தொடர் பயணத்தின்போது விட்டு விட்டு கிடைக்கும் இணைப்பு
இந்த தலைப்பில் புதிய நன்மை தீமைகளை சேர்க்க விரும்புகிறோம் அதற்க்கு எங்களுக்கு உதவ நினைப்பவர்கள் கூடுதல் தகவல்களை இந்த இனைய பக்கத்தின் கமெண்ட் பகுதியில் குறிப்பிடவும் – நன்றி