கட்டுரை

பிளாஸ்டிக் ஒழிப்போம் கட்டுரை-நெகிழி பற்றிய கட்டுரை

பிளாஸ்டிக் ஒழிப்போம் கட்டுரை-நெகிழி பற்றிய கட்டுரை:-பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற வாக்கியம் நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி கேட்கும் ஒரு வாக்கியமாக அமைந்துவிட்டது.

நம்மைச் சுற்றி அமைந்துள்ள அனைத்து பொருட்களிலும் பிளாஸ்டிக் ஏதாவது ஒருவிதத்தில் உள்ளது. சிறிய பொருள் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பழக்கம் மனித அறிவியல் வளர்ச்சியில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டது.

இருந்தபோதிலும் அதிகப்படியான பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் காரணமாக நமது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றானது இதன்காரணமாக ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

நெகிழி எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நமது அன்றாட வாழ்வில் இடம்பெறக்கூடிய ஒரு பொருளாக அமைந்துவிட்டது ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் இந்த நெகிழிப் பைகள் ஆறுகள் குளங்கள் மற்றும் மண் வளங்களை அடைந்து அவற்றை மாசுபடுத்துகின்றன குப்பைகள் சேரும் நெகிழிப் பைகள் மழை வரும் காலங்களில் மழை நீரை மண்ணுக்குள் அனுப்பாமல் தடுக்கிறது . ஆற்றில் கலக்கும் நெகிழிப் பைகள் அங்கு உள்ள மீன் வளத்தை குறைப்பதுடன் நன்னீர் மாசுபாட்டையும் அதிகரிக்கிறது

குப்பையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் போது அது காற்று மாசு அமர்ந்து மனிதர்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது. தொடர்ந்து கடலில் சென்று அடையும் நெகிழிப் பைகள் அங்கு உள்ள இயற்கை வளங்களான பாசிகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் மாசுபடுத்தி இயற்கைக்கு ஒவ்வாத விளைவுகளை ஏற்படுத்துகிறது எனவே நாம் ஒவ்வொருவரும் நெகிழியை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

நெகிழி போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இயற்கை தாவரங்களுக்கும் மண்டலத்திற்கும் கேடாகும் தவறாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மறுசுழற்சி முறைகளில் கூட மனிதனுக்கு தேவையில்லாத தொந்தரவுகளை அதிகம் அடர்த்தி குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் எப்போதும் மறுசுழற்சிக்கு உதவுவது இல்லை இதன் காரணமாக அவற்றை கழிவுகளில் கொட்டுகின்றனர் இதனால் நாம் உயிர் வாழ ஏதுவான சுற்றுப்புறச் சூழலை கொடுத்துள்ள பூமிக்கு நாம் தண்டனையை கொடுக்கின்றோம் எனவே பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது இன்றைய அறிவியல் காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்

Related Articles

Back to top button