Articles

தேசிய பெண் குழந்தைகள் தினம்

இந்திய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி இந்திய தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இதனை 2008 முதல் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அறிவித்து கொண்டாடி வருகிறது

பெண் குழந்தைகள் தினம் கொண்டாடு வதற்கான கரணம்

இந்த தினத்தை மையமாக கொண்டு பல தரப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் இந்திய அரசு செய்கிறது.

குறிப்பாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளை காப்பது ஆண் பெண் குழந்தைகளின் சராசரியை சரி செய்வது மற்றும் குழந்தைகளுக்கான வளர்ச்சி வழிகாட்டுதல்கள் பற்றிய அறிவுரைகளையும் இந்திய அரசு வழங்குகிறது.

இந்த பெண்கள் பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதன் மூலமாக சமூகத்தில் பெண் குழந்தைகளின் சராசரி இழப்பை உழைக்கும் உன்னத நோக்கத்தை நிலைநிறுத்துகிறது இந்திய அரசு இள வயதில் பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தல்

 பெண் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய சமூக உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுத் தருதல் பெண் குழந்தை கல்வி பெண் குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதாரம் போன்றவற்றை பராமரித்தல் என்ற கொள்கைகளை இந்த தேசிய தினத்தை கொண்டாடுவது மூலமாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தனது ஆளுமையை நீட்டி கிறது

உலக பெண்கள் தினம்

உலக பெண்கள் தினம் 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு முதல் அக்டோபர் 11-ஆம் தேதி உலக பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது சிசுக் கொலையை தடுத்து பாலின சமத்துவமின்மை யைக் குறைக்கவும் பெண்குழந்தைகளுக்கான சமத்துவம் உரிமைகளை நிலைநாட்டவும் இந்த நாள் கடைப்பிடிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது பெண் குழந்தை என்றாலே சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு எண்ணங்களை போக்கி ஆரோக்கியமான பெண் சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய சமூக உரிமைகளை பெற்றுத்தர இந்த தினம் கொண்டாடப்படுகிறது

 சமூக வலைத்தளங்களில் பெண் குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினம் வாழ்த்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

Related Articles

Back to top button