கட்டுரை

குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு கட்டுரை – Road Safety Essay in Tamil

சாலை பாதுகாப்பு கட்டுரை – Road Safety Essay in Tamil :- சாலை பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கு மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களின் ஒன்றாகும் .நீங்கள் வாகனம் ஓட்டினாலும் ஓட்டாமல் நடந்து சென்றாலும் இந்த பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுதல் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும் .

மாணவர்கள் மற்றும் குழந்தைகளே சாலைப்பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி அறியாமல் அதிகம் பாதிக்க படுகின்றனர் .சிறு காயங்கள் முதல் மிக பலத்த பாதிப்புகள் வரை குழந்தைகளுக்கு பெரியோர்கள் அல்லாது பயணிக்கும் போது ஏற்படுகிறது ,இவற்றை தடுக்க சாலை பாதுகாப்பு விதிகளை நாம் அன்றாட கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறைகளில் இணைப்பது முதல் இன்றியமையாத ஒன்றாகவும்.அவ்வாறு சாலை பாதுகாப்பை குழந்தைகளுக்கு கற்பிப்பது பெற்றோர் மட்டுமல்லாது பெரியோர்களாகிய நமது கடமைகளில் ஒன்றாகும்

குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு கட்டுரை - Road Safety Essay in Tamil

குழந்தைகளுக்கு சாலைப்பாதுகாப்பு பற்றி கற்பிப்பதின் தேவை

இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்களின் பட்டியலில் அதிகம் பாதிக்க படுவது குழந்தைகள் என்பது தவிர்க்க முடியாத செய்தியாகும் .அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியோர் உதவி இன்றி பயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன் சாலை மற்றும் வாகன பராமரிப்புக்கு முன்னதாகவே சாலை பாதுகாப்பு அம்சங்களை கற்பிப்பது நமது தலையாய கடமையாகும் .பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெரியோர்கள் செய்யும் சாலை தவறுகளினால் ஏற்படும் அபாயத்தை எடுத்துரைப்பதும் ,நாம் செய்யும் சிறு தவறும் எப்போதும் திருத்தி அமைக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்

குழந்தை விபத்து ஏற்பட காரணம்

  • குழந்தை மனநிலை என்பது எப்போதும் ஓர் நிலையில் இருப்பதில்லை இதன் காரணமாக தன்னிலை மறக்கும் குழந்தையின் நோக்கம் தனது பயணத்தின் மீதே இருக்கிறது ,இது போன்ற சூழ்நிலைகளில் அடுத்தவர் செய்யும் சிறு பிழை குழந்தைகளையே பாதிக்கிறது
  • வாகனத்தின் வேகம் மற்றும் திறன் பற்றிய சரியான கணிப்பு ஒரு குழந்தைக்கு அமைவதில்லை
  • வாகன ஓட்டிகள் குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாது
  • வாகன ஓட்டிகளின் கண்களுக்கு சிறுவர்களின் இருப்பு எப்போதும் சரியாக தெரிவதில்லை
  • சாலையை கடக்க பொறுமையை கடைபிடிக்க குழந்தைகளுக்கு கற்று கொடுத்தபோதிலும் பெரியோர்கள் வேகமாக செல்வதை போல் தாமும் செல்ல முயல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன
  • தனது நிலை மாறும் பொது மற்றவரை அபாயத்தின் தன்மையை அறியப்படும் பெரியோர்களின் செயல் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை

குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு வழிமுறைகள்

சாலைபத்துகல்லில் பல அம்சங்கள் இருந்த போதிலும் கீழே கொடுக்க பட்டுள்ள விதிகள் குழந்தைகளுக்காகவே எழுத பட்டதாகும் ,இவற்றில் விதியாக இல்லாத போதிலும் குழந்தைகளின் நலனை காப்பதற்கான செயல்களும் அடங்கும்

  • பெற்றோருடன் பயணம் செய்வதே மிக பாதுகாப்பானது என்பதை அறியவைத்தல்
  • பெற்றோர் இல்லாத நேரத்தில் நம்பிக்கை உடையவர் உதவியை நாடுவது குறித்து சொல்லி கொடுத்தால்
  • சாலை கடக்கும் விதிகள் மற்றும் எங்கே கடக்க வேண்டும் என்ற தகவல்களை கற்பித்தல்
  • சாலை எவ்வாறு உள்ளது என்பதை கணிக்கும் திறனை வளர்த்தல் ,குறிப்பாக பழுதான சாலை,ஈரமான சாலை ,அதிக வாகனங்கள் நிறுத்தி வைக்க பட்டுள்ள சாலைகள் போன்றவற்றை எவ்வாறு அணுகுவது என்ற தகவலை சொல்லிக்கொடுத்தல்
  • சாலை பராமரிப்பு விளக்குகள் மற்றும் சைகை பலகைகளை இனம் காணுதல் பற்றிய அறிவு வளர்த்தல்
  • சாலையை பயன்படுத்தும் முன் முழு கவனத்தையும் ஒன்றுபடுத்துதல் பற்றி எடுத்துரைப்பது
  • சாலையில் வரும் வாகனத்தின் வேகம் எதுவாக இருந்தாலும் பொறுமையுடன் இருப்பது மிக முக்கியம் என்பதை எடுத்துரைப்பது
  • தற்போதைய அறிவியல் வளர்ச்சியினால் தொலைத்தொடர்பு சாதனமான ஸ்மார்ட் போன் பயன்படுத்தி பாட்டு கேட்டு கொண்டு சாலையில் இருப்பதன் ஆபத்தை எடுத்துரைத்தல்
  • ஸ்மார்ட் போன் பயன்படுத்தி கொண்டே வாகனம் இயக்குவது மரணம் ஏற்படும் ஆபத்தை உருவாக்கும் என்பதை தெரிவித்தல்
  • பாதுகாப்பு பொருட்களாகிய தலைக்கவசம் இல்லாமல் சைக்கிள் கூட ஓட்ட கூடாது என்பதை தெரிவித்தால்

Related Articles

Back to top button