கட்டுரை

நூலகம் கட்டுரை – Noolagam Katturai- Library Essay in Tamil

நூலகம் கட்டுரை – Noolagam Katturai- Library Essay in Tamil :- நூலகம் என்பது ஒரு பொழுதுபோக்கு சார்ந்த இடம் என்ற தவறான கருத்து எப்போதும் உண்டு மாறாக நூலகம் என்பது ஒரு அறிவு களஞ்சியம் ஆகும் கோடிக்கணக்கான  தகவல்களை ஒரே இடத்தில் நாம் பெற நூலகம்  ஒன்றே சிறந்த இடமாகும்

 இதன் காரணமாகவே ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் அரசு நூலகங்களை திறந்துள்ளது, தொலைக்காட்சிப் பெட்டி வளர்ச்சி அடைந்து செல்லிடப்பேசி என பொழுதுபோக்கிற்காக தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும் பல சாதனங்கள் வந்துவிட்ட போதிலும் நூலகம் என்பது தனது தனிச்சிறப்பை எப்போதும் இருந்தது கிடையாது புத்தகம் வாசிக்கும் பழக்கமுடைய ஒருவரது சிந்தனை  நல்வழி படுத்துவதோடு மட்டுமல்லாது  ஒருமுகப்படுத்துவது சாத்தியமாகிறது

 நூலகம் என்பது அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் அமைந்துள்ள இடம் என்ற காலம் போய் புதிய டிஜிட்டல் வடிவில் நூலகங்கள் தற்போது கிடைக்கின்றனï ஒரு குறிப்பிட்ட தகவல் சம்பந்தமாக அறிவைத் தேடும் ஒருவர் நூலகம் சென்று தனக்கு தேவையான புத்தகத்தை தேடும் காலம் போய் வீட்டில் அமர்ந்தபடியே இணையம் வாயிலாக தனக்கு தேவையான புத்தகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் 

இணையவழி நூலகங்கள் வந்து விட்டபோதிலும் நிலையான புத்தக நூலகங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது நூலகம் சென்று வரும் பழக்கத்தை பெற்றுவிட்டாய் இளைய சமுதாயத்தினர் மேலும் வளர்ச்சி பாதையில் செல்கின்றனர் சமுதாயத்தினர் குறிப்பாக தங்கள் பாடம் சம்பந்தமான அறிவை வளர்த்துக் கொள்ளவே நூலகத்தை நாடுகின்றனர் இருந்தபோதிலும் நூலகத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் சிறந்த முறையில் நேரத்தை செலவிடும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இந்த பழக்கம் இளைய சமுதாயத்தினருக்கு தேவைப்படுகிறது

 அதிக விலை கொடுத்து வெளிநாட்டு புத்தகங்களை வாங்கும் வசதியும் அவற்றை இரவல் வாங்கி படிக்கும் வசதியில் ஏழை மாணவர்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் கிடைப்பது கிடையாது இவற்றை சரி செய்ய வே ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் அரசு தனது செலவில் புதிய புதிய நூலகங்களை அமைத்து வருகிறது தொடர்ந்து நூலகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் புதிய புதிய புத்தகங்கள் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மற்ற மொழி புத்தகங்களும் பரவலாக எல்லா நூலகங்களிலும் பகிர்ந்தளிக்கப்படுகிறது

 நாகரிக வளர்ச்சியில் இணையத்தின் வாயிலாக அனைத்து செய்திகளையும் ஒரு மாணவர் பெற்றுவிட முடியும் என்ற போதிலும் குறிப்பாக அறிவியல் கட்டுரைகள் முழுவதுமாக இணையத்தில் கிடைப்பது கிடையாது அதேநேரத்தில் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள அறிவியல் கருத்துக்கள் உண்மையானதாகவும் நம்பிக்கைத் தன்மை உடையதாக இருக்கிறது எனவே தான் புத்தகங்களுக்கு எப்போதும் கிராக்கி உள்ளது எனவே நூலகத்தை நாடும் மக்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் இளைய சமூகத்தினருக்கு நூலகத்தை பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிக முக்கியமான ஒன்றாகும்

சிறு குழந்தைகளுக்கு முதல் முறையாக நூலகம் செல்லும் பழக்கத்தை ஆரம்பிக்க சிறு சிறு கதை புத்தகங்களை படிக்கும் ஆவலை ஏற்படுத்துதல் வேண்டும் இதனைத்தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவர்களது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது வேண்டும் இவ்வாறான செயல்கள் மூலமாக ஒரு குழந்தையை நூலகம் சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்

Related Articles

Back to top button