கட்டுரை

எனது கிராமம் கட்டுரை

ஒவ்வொருவருக்கும் தான் வசிக்கும் ஊரை பற்றிய தற்போதைய இமைகள் எப்போதும் உண்டு அந்த வகையில் நான் வசிக்கும் எனது கிராமத்தை பற்றிய கட்டுரையை இந்தப் பக்கத்தில் எழுதுகிறேன்

 எனது ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும் எனது ஊரை சுற்றி மிகப் பெரிய விவசாய நிலமும் அதனைத்தொடர்ந்து சிறு குன்றுகளும் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள கிராமம் எனது கிராமம் ஆகும் எனது கிராமத்தை பொறுத்தவரை இயற்கை எழில் மிகுந்த தோற்றத்தை உடைய சராசரி கிராமமாக இருந்தபோதிலும் வளர்ந்து வரும் அறிவியல் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்ட ஒரு கிராமமாக வகையை பார்க்கிறேன்

 ஏனென்றால் நகரில் வாழும் மனிதர்களுக்கு கிடைக்கும் அனைத்து அறிவியல் சாதனங்களும் எங்கள் ஊரிலும் கிடைக்கிறது புதிய புதிய கண்டுபிடிப்புகளும் புதிய புதிய வாகன வரவுகளும் எங்கள் ஊரில் துரிதமாக அறிமுகமாகின்றன இருந்தபோதிலும் இயற்கை எழில் கொஞ்சும் விவசாய நிலங்களை படுத்தாத எனது கிராமத்தின் நினைத்து நான் பெருமை கொள்கிறேன்

 எனது ஊரின் அருகில் அரசு பள்ளி ஒன்று உள்ளது அந்தப் பள்ளியில் தான் நான் படித்து வருகிறேன். இன்று மிகப்பெரிய மேதைகளாகவும் அறிவியல் அறிஞர்களாகவும் இருக்கும் பலர் எங்கள் பள்ளியில் படித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு எங்களுக்கு ஒரு சிறப்பான நூலகத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளது எங்கள் ஊரில் அதிக மாணவர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்துகிறோம் எங்கள் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் நிறைய புத்தகங்கள் அந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளது

 எங்கள் ஊரின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த மருத்துவமனைக்கு போதுமான சலுகைகளும் போதுமான வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது இதன்காரணமாக 24 மணி நேரமும் எங்கள் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம் அடுத்தபடியாக எங்கள் ஊரில் மிகப்பெரிய அம்மன் கோவில் ஒன்று உள்ளது அதன் அருகில் மிகப்பெரிய குளம் ஒன்றும் உள்ளது இந்த கோவிலில் வருடா வருடம் நடக்கும் மாசி திருவிழா எங்கள் ஊர் குழந்தைகளுக்கு குதூகலத்தையும் நண்பர்கள் உற்றார் உறவினர்களை சந்திக்கும் ஒரு விழாவாகவும் இது அமைகிறது கோவில் திருவிழா மட்டுமல்லாது பொங்கல் தீபாவளி பண்டிகை போன்ற பண்டிகைகள் எங்கள் கிராமத்தில் அதிக சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது

 எங்கள் ஊர் ஒரு கிராமமாக இருந்த போதிலும் இணைய வசதி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கு ஒருபோதும்  குறை இருந்ததில்லை ஏனென்றால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இந்திய தொலைத்தொடர்புத் துறையின் தொலைபேசி நிலையை இணைப்புகள் எங்கள் ஊரை எப்போது வந்தடைந்து விட்டன மேலும் செல்லிடப்பேசி எனும் மொபைல் போன் அவர்கள் எங்கள் ஊரில் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன

Related Articles

Back to top button