கல்வி செய்திகள்செய்திகள்

பள்ளி கல்வி துறை புதிய அறிவிப்பு ஏப்ரல் 16 முதல் 30 வரை அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்

பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்ட தகவல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகளை நடத்த வேண்டும் என செய்தி வெளியிட்டுள்ளது

company of cheerful indian schoolgirls and boys sitting on stone ground near school in village
Photo by Sanket Mishra on Pexels.com

பொதுவாக கோடைகாலங்களில் ஏற்படும் உடல்நல குறைபாட்டினை தவிர்க்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சகம் விழிப்புணர்வு அறிவிக்கைகளை வழங்குவது வழக்கம் ,அதன்படி இந்த ஆண்டும் மாணவர் மற்றும் ஆசிரியர்களை கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு தேவைகள் நிகழ்வுகளை நடத்திட அறிவுறுத்தும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது

இதனை அடிப்படையாக கொண்டு தமிழக பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் . பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களையும் தங்கள் சுற்றத்தாரையும் தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும், மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள அறிவுறுத்தி கடிதம் அனுப்ப பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் -16 ம் தேதி முதல் ஏப்ரல் 30 ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடத்திடும் நிகழ்வுகளை மத்திய கல்வி அமைச்சக வலைதள இணையத்தில் அல்லது இணைப்பில் புகைப்படமாகவோ , ஒளிக் காட்சியாகவோ, வீடியோ படமாகவோ அல்லது அறிக்கையாகவோ பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்த பட்டுள்ளது .

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் , மத்திய கல்வி அமைச்சகத்தின் கடிதத்தின் படி பரிந்துரைக்கப்பட்ட பங்கேற்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகமாக காணப்படும் . கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பருவ நிலை மாற்றத்தினால் கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி வெப்பத்தின் தாக்கம் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது .

கோடை காலம் துவங்கிய நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் மிக அதீத கோடை வெப்ப நாட்களை மாணவர்கள் பத்திரமாக கடக்கவும் ,தங்களை மட்டுமல்லாது தங்கள் குடுப்பதினர் மற்றும் நண்பர்களை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாத்திடவும் இதுபோன்ற முன்னெடுப்பு நிகழ்வுகளை தொடர்ந்து மத்திய அரசரின் கல்வி இயக்கங்கள் செய்து வருகின்றன ,

அவற்றின் அறிவுறுத்துதலை ஏற்று மாநில அரசுகளின் பள்ளி கல்வி துறை சார்ந்த இயக்கங்களும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதில் சிறப்பாக வளர்ச்சி அடையாளம் என்ற கருது அனைத்து கல்வி இயக்கங்களிலும் பாராட்டுக்கு உட்பட்டு கருத்து அமைக்க பட்டு வருகிறது

Related Articles

Back to top button