கட்டுரை

கல்வி கண் திறந்தவர் கட்டுரை – Essay About K Kamarajar in Tamil – காமராஜர் கட்டுரை

கல்வி கண் திறந்தவர் கட்டுரை – Essay About K Kamarajar in Tamil – காமராஜர் கட்டுரை :-இந்திய துணைகண்டமட்டும் அல்லாமல் உலகில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களை காட்டிலும் மிக உன்னத கல்வி பணிகளை செய்ததால் நாம் கல்வி கண் திறந்தவர் என கர்ம வீரர் காமராஜரை அழைக்கின்றோம்

முன்னுரை

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் தேசத்தின் வளர்ச்சியில் மிகுந்த அர்ப்பணிப்பை வழங்கியவர் காமராஜர் ,குறிப்பாக கல்வி பணியில் அவராற்றிய பணிகள் இன்றளவும் உலக அரங்கில் அவருக்கு உயர்ந்த இடத்தை கொடுக்கிறது , தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு ஆரம்ப பள்ளியாவது இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது கல்வி பணியை துவங்கினார்.இதனுடன் கல்வி ஒருவருக்கு அடிப்படை உரிமை என்பதை நம்பினார் எனவேதான் ஒவ்வொருவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்க பாடுபட்டார்

ஆரம்பகால கல்வி பணிகள்

காமராஜர் முதல்வராக வருவதற்கு முன்னதாக பல பள்ளிகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை இருந்தது ,இதனை கடுமையாக எதிர்த்து குறைந்த பட்ச பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதை தடைசெய்தார்,தனது கட்சி அரசியல் தலைவர்கள் செய்த புது பள்ளி கல்வி மாறுதல்களை தடுக்க காமராஜர் எடுத்த முயற்சிகள் ஏராளம் , தன்னை கல்வி அறிவு இல்லாதவர் என பலர் பொது வெளியில் பேசுவதை கூட பொருட்படுத்தாத காமராஜர் ,என்னை போல் இன்னொரு கல்வி அறிவில்லாத குழந்தை இந்த நாட்டில் இருக்க கூடாது என்பதை தனது கொள்கையாகவும் கொண்டார்,இதுவே பின்னாட்களில் முதலமைச்சர் மற்றும் தேசிய தலைவராக அவர் மாறிய பிறகு தொடர்ந்து கல்வி பணிகளை செய்ய தூண்டுதலாக இருந்தது

முதலமைச்சராக கல்விப்பணி

காமராஜர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆரம்ப பள்ளி ,ஒவ்வொரு ஐந்து கிராமத்திற்கு ஒரு உயர்நிலை பள்ளி என்பதை தனது கனவாக கொண்டு அதற்க்கான முயற்சிகளை துவங்கினார்,அந்த காலகட்டத்தில் மத்திய அரசி கொடுக்கும் வளர்ச்சி நிதிகளை அனைத்து மாநிலங்களும் பெறுவது இல்லை என்பதை அறிந்தார் . இதற்க்கு வளர்ந்து வரும் மாநிலமான தமிழக முதலமைச்சரான இவர் ,வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் பெறாமல் இருந்த வளர்ச்சி நிதிகளை ஒன்று திரட்டி தமிழ்நாட்டிற்கு கல்வி பணியை காரணமாக காட்டி பெற்றார்

பள்ளிகள் கட்டுதல்

தனது ஆட்சியில் பெரும் பொருள்செலவை கல்வி பணிகளுக்கு செலவிட்ட காமராஜர் ,புதிய பள்ளிகளை காட்டுவதோடு அல்லாமல் ,மூடும் நிலையில் உள்ள பள்ளிகளை அரசு வசம் கொண்டுவருதல் ,ஏற்கனவே நிதி பற்றாக்குறையை காரணமாக கொண்டு மூடப்பட்ட அரசு பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் புதுப்பித்து அரசு பள்ளிகளாக மாற்றினார்.

அரசு உதவி பெரும் பள்ளிகள்

போதுமான அரசு பள்ளிகளை கட்டும் முயற்சியில் இறங்கிய காமராஜர் ,அனைத்து நிதியையும் கட்டிடங்கள் கட்டுவதில் செலவிட விரும்பவில்லை எனவே தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க முயற்சி செய்தார் ஆனால் நன்றாக இயங்கிவரும் தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க விரும்பாத அவர் அவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்தால் ,புதிய கட்டிடம் கட்டுதல் போன்ற காரியங்கள் மூலமாக அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகள் என்ற ஒரு வகைப்பாட்டை கொண்டுவந்தார்.இதன் மூலமாக ஏற்கனவே பள்ளிகள் இருந்த கிராமங்களை தவிர்த்து மற்ற தேவைப்படும் பகுதிகளில் பள்ளிகள் கட்ட பயன்படுத்தி நிதியை சரியான வகையில் செலவிட்டார்

மாணவர் நலனும் மதிய உணவு திட்டமும்

குழந்தை தொழிலாளர் முறை உச்சியில் இருந்த காலகட்டம் அது ,எனவே வசதி வாய்ப்பு குறைவாக இருந்த குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் பள்ளி செல்வதை உறுதி செய்ய இயலவில்லை ,எனவே ஒரு வேலை இலவச உணவு என்ற திட்டத்தை உருவாக்கி வேலைக்கு சென்று உணவருந்தும் நிலையில் இருந்த குழந்தைகள் பள்ளி சென்று உணவருந்தி கூடுதலாக கல்வி அறிவையும் பெறுவதை உறுதி செய்தார். இன்றளவும் நிறய அரசு அதிகாரிகள் முதியோர்கள் ஒரு வேலை உணவுக்காகவே நான் பள்ளி சென்றேன் என்ற சொற்றொடரை பயன்படுத்துவதை கேட்டு வருகிறோம்,இதற்க்கு முதற் காரணம் கல்வி கண்திறந்தவர் ஒருவரே ஆவார்

உயர்கல்வியில் புதிய முயற்சி

பள்ளி கல்வி கொடுக்கும் அரசு திட்டங்களை செவ்வனே செய்த காமராசர் ,உயர் கல்வி இலவசமாக கிடைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு கல்லூரிகளை துவங்கும் திட்டத்தை துவங்கினார்,பள்ளி கல்வி பயின்று நகரங்களுக்கு படிக்க வரும் மாணவர்களுக்காக மாணவர் தங்கும் விடுதிகளை துவங்கும் திட்டமும் அதனுள் அடக்கம்.

முடிவுரை

பள்ளி கல்வி உயர்கல்வி துறையில் தனது உயர்ந்த தொலைநோக்கு பார்வையில் அவர் வெற்றி பெற்றார் என்பதே உண்மை ,இதன் காரணமாகவே இன்றளவும் 75 ஆண்டுகளை நிறைவு செய்த பள்ளிகள் இங்கு இருக்கின்றன. பழமைவாய்ந்த கல்லூரிகள் நிதி பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டன என்ற செய்தி தமிழ்நாட்டில் இல்லாமல் இருப்பதும் கல்வி கண்திறந்த காமராஜர் என்ற பதத்தை உறுதி செய்கின்றன

Related Articles

Back to top button