கல்வி செய்திகள்

TNAU – கலந்தாய்வு கட்டணம் செலுத்துவதில் சிக்கல்

தமிழகத்தில் வேளாண் இளங்கலை பட்ட படிப்பிற்க்கான சேர்க்கை கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்த படுகிறது.2022 வேளாண் பட்ட படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வின் முதல் பகுதியாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான முதல் கலந்தாய்வு 23.02.2022 முதல் நடந்து வருகிறது

முதல் கலந்தாய்வு அழைப்பு

இதனை தொடர்ந்து முதலாவது கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கலந்தாய்வு கட்டணம் செலுத்த அழைப்பு செல்போன் மற்றும் ,ஈமெயில் முகவரி மூலமாக விடுக்கப்பட்டது.நேற்றுமுதல் (24.05.2022) கலந்தாய்வு கட்டணம் செலுத்த மாணவர்கள் ஆர்வமுடன் முனைந்தனர் ,ஆனால் டெபிட் கார்டு மூலமாக கலந்தாய்வு கட்டணம் செலுத்துவதற்கு தனியார் வங்கி மூலமாக வசதி செய்யப்பட்டிருப்பதால் நிறைய மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மூன்றுமுறை OTP குறுஞ்செய்தி

டெபிட் கார்டு மூலமாக கட்டணம் செலுத்த முற்படும்போது உங்கள் சேமித்த கார்டை பயன்படுத்த OTP ஒன்று வருகிறது ,அதனை தொடர்ந்து டெபிட் கார்டு தகவல்களை அழைக்கும்போது உங்கள் கார்டை சேமிக்கவா என்று கேட்டு மற்றோரு OTP ஒன்று வருகிறது.இதனை தொடர்ந்தே கொடுக்க பட்ட வங்கி சேவைக்கு மாற்ற படுகிறது.

மூன்றுமுறை OTP வருவதினால் மாணவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள்,

முறையாக கலந்தாய்வு கட்டணம் செலுத்த

டெபிட் கார்டு மூலமாக கட்டணம் செலுத்த முதலில் வரும் இரண்டு குறுஞ்செய்திகளை தவிர்க்கவும் ,உங்கள் வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தியை மட்டும் பயன்படுத்தவும் ,உங்கள் டெபிட் கார்டு தகவல்களை சேமிக்கவா அல்லது பயன்படுத்தவா என்ற கேள்வி வரும்போது அதனை நிராகரிக்கவும்

இன்டர்நெட் பாங்கிங் மூலமாக கலந்தாய்வு கட்டணம் செலுத்துவது மிக எளிமையாக உள்ளது ,அதனை முயற்சி செய்யவும்

Related Articles

Back to top button