கட்டுரை

பொங்கல் பண்டிகை கட்டுரை – Pongal Essay in Tamil

பொங்கல் பண்டிகை கட்டுரை – Pongal Essay in Tamil:- பொங்கல் என்பது இந்திய நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகும். முக்கியமாக இந்திய நாட்டில் வசித்து வரும் விவசாயிகள் தங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல கொண்டாடப்படும் விழா என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா நான்கு நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும் விவசாயிகள் அறுவடை முடித்துக்கொண்டு நல்ல மனதுடன் கொண்டாடும் திருவிழா இதுவாகும். வருடம் முழுவதும் தொடர்ந்து நிலங்களில் அயராது பாடுபட்டு வந்த விவசாய தொழில் செய்யும் மனிதர்கள் தங்கள் கடமைகளை முடித்துக்கொண்டு சந்தோசமாக கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகையாகும்.

 பொங்கல் பண்டிகையின் வரலாறு

 ஆதிகாலம் தொட்டே தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பழக்கம்  தென் இந்தியாவில் இருந்து வந்துள்ளது 

ஆதி காலம் தொட்டே பொங்கல் பண்டிகையை கொங்கு தொடங்கியது பற்றிய சிறுகதைகள் இங்கு ஏராளமாக உள்ளது ஒரு காலத்தில் சூரிய கடவுள் பூமிக்கு சென்று மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும்படி ஒரு  காளையை ஏவிய தாகவும் அந்த காளைக்கு மனிதர்களுக்கு மாதம் ஒருமுறை உணவு உண்ணவும் தினம் தோறும் எண்ணை தேய்த்து குளிக்கவும் செய்தி பகிரப்பட்டது எனவும் கூறப்படுகிறது பூமிக்கு வந்த காலை தனக்கு கொடுத்த செய்தியை மாற்றி சொல்லி விட்டதாகவும் இதன் காரணமாக மனிதர்கள் தினமும் உணவு உண்டு மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை தொடங்கியதாகவும் இந்த கதைகளில் கூறப்படுகிறது இதனால் கோபமுற்ற இறைவன் நீ செய்த தவறின் காரணமாக தினந்தோறும் உணவு உண்ணும் மனிதர்களுக்கு உணவு படைக்கும் தொழிலை மேம்பட்டு செய்ய அவர்களுக்கு உதவியாக இருந்து உழவுத் தொழில் திறம்பட செய்து முடிக்க உறுதுணையாக இருக்கவும் ஆனதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாகவே காலையை உழவுத் தொழிலில் மக்கள் ஈடுபடுவதாகவும் காலைக்கு நன்றி சொல்லவும் ஒரு தினம் பொங்கல் பண்டிகை யோடு இணைத்து கொண்டாடப்படுகிறது

 பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதம்

 தென்னிந்திய மக்கள் பொங்கல் பண்டிகையை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுகின்றனர் அவர்கள் புத்தாடை  முடியும் தங்களது வீடுகளை தூய்மைப்படுத்தும் புதிய வண்ணங்கள் பூசியும் கொண்டாடுகின்றனர்

 பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி என்ற சொல் விலைக்கு ஏற்றவாறு பழைய பொருட்களை விட்டுவிட்டு புதிய பொருட்களுக்கு நகரும் நிகழ்வு இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. இதன் காரண பழைய புதுமையாகும் நிகழ்ச்சியை மக்கள் அரங்கேற்றுகின்றனர். பழைய பொருட்களை எரிக்கும் பழக்கமும் இதிலிருந்து தொடங்குகிறது

 பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாள் முக்கிய பண்டிகையாகும் இது இறைவனுக்கு நன்றி சொல்லவும் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரிய கடவுளுக்கு நன்றி சொல்லவும் பொங்கலிட்டு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெல்லம் மற்றும் பருப்புடன் இணைந்து பச்சரிசியில் செய்யப்படும் பொங்கல் உணவை செய்யும் மக்கள் இதனை இறைவனுக்கு படைத்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்

 பொங்கல் பண்டிகையின் மூன்றாவது தினத்தில் தங்கள் உழவர் தொழிலுக்கு உடனிருந்து பணியாற்றும் சேவகனான காளைகளுக்கும் மற்ற வீட்டு விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர் குறிப்பாக காளைகளை வைத்து நிகழ்த்தப்படும் வீர விளையாட்டுகள் இந்த தினத்தில் நடைபெறுகிறது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாத பொங்கல் பண்டிகையை இல்லை

 பொங்கல் பண்டிகையின் நான்காவது தினம் காணும் பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது புதிய உறவுகளை மேம்படுத்த உற்றார் உறவினர்களை மீண்டும் சந்திக்க நீண்ட நேரம் பயணம் செய்து தங்கள் இல்லங்களுக்கு சென்று குதூகலத்துடன் இருக்க இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய நண்பர்களை காணும் ஒரு நிகழ்வாக இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு முதியவர்கள் மீது பாசத்தையும் மரியாதையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் நிறைவேற்றுகின்றனர்

Related Articles

Back to top button