கட்டுரை

எனது குறிக்கோள்கள்- My Goals essay-My Aims in Life Essay

எனது குறிக்கோள்கள்- My Goals essay-My Aims in Life Essay”- ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே ஆகும். வெற்றியை ருசிக்கும்  நோக்கத்தினால் அனைவரது குறிக்கோள்களும் நிர்ணயிக்கப்படுகின்றன.  எனவே எனது வாழ்வில் வெற்றி என்ற மைல்கல்லை தொட நான் எடுத்துக் கொண்டுள்ள குறிக்கோள்களை இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்துகிறேன்

 எனது வாழ்வின் குறிக்கோள்

 எனது வாழ்வில் நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன். நல்ல மனிதன் என்ற சொற்ரொடருக்கு ஏற்றார் போல் என்னை நான் மாற்றிக் கொள்ள மிகுந்த உழைப்பையும் மிகுந்த அக்கறையும் மேற்கொள்ள வேண்டும் என்று எனது பெற்றோர் சிறு வயது முதலே எனக்கு  கற்பித்து வந்துள்ளனர். அதன் அடிப்படையில் எனது வாழ்வில் நான் ஒரு நல்ல மனிதனாக வாழ்வதற்கு அவர்கள் கூறிய சில அறிவுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

  •  எந்த நிலையிலும் அவர்கள் சொல்வதை உன்னிப்பாக கவனித்தல்
  •  எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மைத் தன்மையை அறிந்த பின்பு நம்புதல்
  •  எந்த ஒரு விடையையும் கேள்வியை உன்னிப்பாக கவனித்து அதன் சாராம்சத்தை அறிந்துகொண்டு பின்பே வெளிப்படுத்துதல்
  •  ஒன்றே செய் நன்றே செய் என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு இன்றைய தினமே நல்லது

 இதுபோன்ற சிறுசிறு அறிவுரைகளை எனது பெற்றோர் கூறியுள்ளனர் இவற்றை முழுமையாக கடைபிடித்து வாழ்வில் ஒரு நல்ல மனிதனாக வாழ்வதே எனது குறிக்கோளாகும்

 வெற்றி குறிக்கோள்

 எனது வாழ்வை வளமாக வைத்துக் கொள்வதற்கு நான் ஒரு துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் இளமைக் காலம் தொட்டே பொறியாளராக மாற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இதற்கான காரணம் சிறுவயது முதலே மறைந்த குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கையூட்டும் பேச்சுக்கலை கேட்டதாலும் எனது பெற்றோரின் அறிவுறுத்தலின்படி அவர் எழுதிய புத்தகங்களை படித்தால் மட்டுமே ஏற்பட்டது அன்று. பொறியியல் என்பது சாதாரண ஒரு பாடத்திட்டம் மட்டுமல்ல அது ஒரு கலை என்பதை எனக்கு அப்துல் கலாம் அவர்களின் புத்தகத்தின் மூலம் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து எனது குறிக்கோள் ஒரு நல்ல பொறியாளராக மாறவேண்டும் என்பதே.

 பொறியாளராக மாறவேண்டும் என்ற எண்ணத்தை எனது பெற்றோருடன் கலந்து ஆலோசித்த பிறகு பொறியாளர் ஆவது இன்றைய சூழ்நிலையில் மிக மிக எளிது பொறியியல் படிப்பை பயில்வதன் மூலம் ஒரு இளங்கலைப் பட்டத்தை வேண்டுமென்றால் நீ பெற்றுக் கொள்ளலாம் ஆனால் நல்ல  பொறியாளராக மாற வேண்டுமென்றால் உன் நான் மனதை தொட்டு அந்தக் கலையை பயில வேண்டும் என்று எனது மூத்தவர்களும் எனது பெற்றோரின் எனக்கு அறிவுரை வழங்கினார் இதன் தொடர்ச்சியாக.

 பொறியியல் என்பது என்ன என்பதை பள்ளிப் படிப்பின் போதே நான் கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டேன் எனது பள்ளிப் படிப்பை முடித்த கையுடன் எனக்கு மிகுந்த ஆவலை உருவாக்கியுள்ள கணினி புரியலை நான் தேர்ந்தெடுக்க உள்ளேன் இதுவே எனது வாழ்வின் முதல் படியாக அமையும் என்று நான் விரும்புகிறேன் குறிப்பாக புதியபுதிய கணினி கண்டுபிடிப்புகள் என்னை அதிகரித்துள்ளதால் நான் ஒரு கணினி பொறியாளர் ஆக மாற விரும்புகிறேன் இதுவே எனது விருப்பமும் குறிக்கோளும் ஆகும்

 எனது குறிக்கோளை அடைவதற்கு நான் தினமும் உழைக்க வேண்டும் என்பது நான் அறிந்ததே இதன் காரணமாகவே எனது குறிக்கோளை எட்டிய மற்றவர்களைப் பற்றிய செய்திகளை அதிகம் சேகரித்து வருகிறேன். பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது முதல் குறிக்கோள் என்று சிலர் கூறினர் இருந்தபோதிலும் சாதாரண ஒரு நகரம் சார்ந்த பகுதியில் அமைந்துள்ள புதிய பொறியியல் கல்லூரியில் படித்த சிலரே அதிக கண்டுபிடிப்புகளை கொடுத்து உள்ளதையும் நான் அறிகிறேன் எனவே பொறியியல் கற்றுத்தரும் கல்லூரி எனது குறிக்கோளை மேம்படுத்தும் ஏ தவிர அதனை ஒருபோதும் கிடைக்காது என்பதையும் நான் அறிவேன். பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணத்தை நிறைய செய்தி கட்டுரைகள் எனக்கு தினம் தினம் போதித்து வருகின்றன ஒரு எதிர்மறையான கருத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை நான் பல புத்தகங்கள் மூலமாகவும் எனது பெற்றோரின் வாழ்க்கை தத்துவம் மூலமாகவும் அறிந்து கொண்டுள்ளேன் எனவே நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு நான் எப்போது மாறிவிட்டேன் ஆகவே படிப்பில் நல்ல மாணவனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நான் பயிலும் ஒவ்வொரு விஷயத்தையும் அதன் அடி ஆழம் வரை சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் தற்போது பிறந்துள்ளது

Related Articles

Back to top button