கட்டுரை

எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை – My Favourite Sports in Tamil

எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை – My Favourite Sports in Tamil :-சிறுவனாக இருந்து வந்த காலம் தொட்டே எனக்கு பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே இருந்து வந்தது. நான் மேல்நிலைப்பள்ளியில் படிப்பை தொடங்கிய காலம் முதலாக எனக்கு பிடித்தமான விளையாட்டாக கால்பந்து இருக்கிறது. உடலை உறுதியாக வைத்துக் கொள்வதற்கும் மனதை திடமாக வைத்துக் கொள்வதற்கும் ஏதாவது ஒரு விளையாட்டை தினசரி விளையாடி வருவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமானது என்று எனது தந்தை கூறுவார். அதனடிப்படையில் கால்பந்து விளையாடுவது மூலமாக அதிக தூரம் என்னால் ஓட முடிகிறது அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் விளையாடுவதால் மனதிற்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது இதன் காரணமாகவே கிரிக்கெட்டிலிருந்து எனது மனம்  கால்பந்து  விளையாட்டிற்கு மாறியது.

My Favourite Sports in Tamil

தற்போதைய காலகட்டத்தில் நகரப் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதுமான அளவு விளையாட்டு மைதான இடம் இல்லை. ஆனால் எங்கள் பள்ளி கிராமப்புறத்தில் அமைந்திருக்கும் ஒரு நடுநிலைப்பள்ளி ஆகும். எங்கள் பள்ளி 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட  பள்ளியாகும். எனவே எங்கள் பள்ளிக்கு போதுமான விளையாட்டு மைதானம் அப்போதே அமைக்கப்பட்டு விட்டது. எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு பயன்படும் படியாக கால்பந்து மைதானம் முந்தைய காலம் தொட்டே இருக்கிறது. இந்த பள்ளியில் சேர்ந்த நாள் முதலாக விளையாட்டு ஆசிரியர் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார்.

 அவரது அறிவுறுத்தலின்படி கால்பந்து விளையாட்டை விளையாட ஆரம்பித்தேன் கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு அதிகமாக ஏற்பட்டதன் விளைவாக மிக விரைவிலேயே எங்கள் பள்ளியை கால்பந்து விளையாட்டு அணியின் கேப்டனாக என் எண்ணை நியமித்தார் எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியர். எங்கள் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாக்களில் அனைத்து வகுப்பினருக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெறும் இவ்வகை போட்டிகளில் எங்கள் வகுப்பிற்கு விளையாடும் நான் ஒவ்வொரு ஆண்டும் பரிசில் பெற்று வந்திருக்கிறேன்

 இதோடு மட்டுமல்லாது அருகிலுள்ள பள்ளிகளில் இடையே நடக்கும் ஜோனல் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று இந்த முறை மாவட்ட ரீதியான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஏன் இந்த விளையாட்டு உனக்கு அதிகம் பிடிக்கிறது என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு அதற்கான காரணமாக நான் கூறுவது இந்த விளையாட்டை எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் மிகப் பெரிய மைதானம் இருந்தாலும் சரி சிறிய சாலை மைதானம் இருந்தாலும் சரி இந்த விளையாட்டை விளையாடலாம் மிகக் குறைந்த பொருட்செலவில் இந்த விளையாட்டிற்காக ஒரு பந்து மட்டும் வாங்கினால் போதும் அதனைக் கொண்டு வருடம் முழுவதும் பல நபர்கள் இணைந்து உற்சாகமாக விளையாடலாம் மழை காலங்களில் கூட கால்பந்து விளையாடுவதற்கு தடை ஏதுமில்லை போன்ற காரணங்களை நான் கூறுகிறேன்

Related Articles

Back to top button