கட்டுரை

எனக்கு பிடித்த ஆசிரியர் கட்டுரை

ஒவ்வொரு மாணவனின் வாழ்விலும் ஆசிரியர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது அறிவியல் உண்மை ஆகும். குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு ஆசிரியரே  இடம்பெறுகிறார்.  அந்த வகையில் எனக்கு தந்தைக்கு தந்தையாகவும் சகோதரனுக்கு சகோதரனாகவும் அறிவியல் புகட்டிய எனது  அறிவியல் ஆசிரியர் எனக்கு மிகப்பிடித்த ஆசிரியராவார் அவரைப்பற்றிய செய்திகளை  இந்த கட்டுரையில் குறிப்பிடுகிறேன்

 தூய்மையும் நல்லொழுக்கமும்

 நல்லொழுக்கம் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் அடிப்படைத் தேவை என்பதை எங்களுக்கு புரிய வைத்தவர் எங்கள் அறிவியல் ஆசிரியர். நல்லொழுக்கத்திற்கு முதற்படியாக சுத்தமான உடை மற்றும் சுத்தமான நடவடிக்கைகள் போன்றவையே என்று எங்களை சிந்திக்க வைத்தவர் எங்கள் அறிவியல் ஆசிரியர். தூய்மை பற்றி எங்களுக்கு  கற்பித்தது மட்டுமல்லாமல் தனது உடை மற்றும் நடவடிக்கைகள் மூலமாக தூய்மையைப் பற்றி எங்களுக்கு நடமாடும் உதாரணமாக இருக்கிறார்.

 நேரம் தவறாமை

 மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நேரம் தவறாமையை கடைபிடித்து வருவதன் மூலமாக வெற்றிப்பாதைக்கு செல்லலாம் என்பதை எங்களுக்கு ஊக்குவித்தவர் எங்கள் அறிவியல் ஆசிரியர் ஆவார். நேரம் தவறாமல் நடந்து கொள்ளும் அவரது பழக்கவழக்கங்கள் சிறுகச்சிறுக என்னிடம் வந்து சேர்ந்து விட்டன. எந்த ஒரு விஷயத்தையும் காலம் தாழ்த்தாமல் செய்து முடிப்பதும் நேரம் தவறாமல் செய்ய வேண்டிய செயல்களை செய்து முடிப்பது மட்டுமே இன்றைய வாழ்வில் வெற்றிக்கான முதல் படி என்பதை எங்கள் அறிவியல் ஆசிரியரைக் கொண்டு அவரது நடவடிக்கையை கொண்டும் நான் அறிந்து கொண்டுள்ளேன்.

 படிப்பில் கவனம்

 எப்போதும் அறிவியல் பாடத்தில் சற்று கவனம் குறைவாகவே இருந்து வந்தனான் புதிய புதிய கற்பித்தல் வழிகளின் மூலமாக பாடம் நடத்திய எங்கள் அறிவியல் ஆசான் அவர்களைப் பின்பற்றி இன்று எனக்கு பிடித்த பாடமாக அறிவியல் இருக்கிறது. இதற்கு காரணம் புதிய தொழில்நுட்பங்களை பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாது தேர்வுகள் நடத்துவதிலும் கையாளுகிறார் குறிப்பாக. வாரா வாரம் நடைபெறும் பள்ளித் தேர்வுகளை நடத்தும்போது புதிய முறையில் வினாத்தாள்களை தயார் செய்து வருவார். குறிப்பாக வினாக்களுக்கு புதிய சித்திரங்களையும் பயன்படுத்தி வினாத்தாள் தயாரித்து எங்களுக்கு வழங்குவார். இதன் காரணம் வினாத்தாள் எங்கள் வரத் தொடங்கிவிட்டது.

ஆசிரியர் மாணவர் நட்புறவு

 இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் சில ஆசிரியர்களை நாடி தங்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்வதற்கு கூட தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணமாக அறிவியல் வளர்ச்சியில் கடினமான பணிகளை ஆசிரியர்கள் செய்து வருவதனால் அவர்கள் மாணவர்களின் சாதாரண பிரச்சினைகள் மீது கவனம் கொள்வதில்லை. இதனை மீறி எங்கள் அறிவியல் ஆசிரியர் எப்போதும் மாணவர்களின் சிறு சிறு பிரச்சினைகளை முதலில் தீர்த்து வைக்கும் பழக்கம் உடையவராக இருக்கிறார் இதற்கு முதற்படியாக மாணவர்களின் குறைகளை கேட்டறியும் நட்பு வட்டாரத்தை ஆரம்ப நாள் முதலாக அவர் அமைத்து வந்துள்ளார்

 இத்தகைய அறிவையும் ஒழுக்கத்தையும் ஊட்டிய எனது ஆசிரியர் எனக்கு பிடித்த ஆசிரியர் ஆவார்

Related Articles

Back to top button