சினிமா செய்திகள்

வந்தார் வந்தியத்தேவன் – பொன்னியின் செல்வன் போஸ்டர் வெளியீடு

கார்த்தி வந்தியத்தேவனாக நடிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

Ponniyin Selvan New Poster Released:-கார்த்தி வந்தியத்தேவனாக நடிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

செப்டம்பர் 30 இல் வெளியாகிறது மணிரத்தினத்தின் படைப்பில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ,மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க பட்டுள்ள இந்த திரைப்படத்தின் விளம்பர பணிகள் தொடங்கியுள்ளது , இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் படக்குழுவினரால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திர போஸ்டர் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டது ,அதனை தொடர்ந்து கதையின் முக்கிய நாயகனான வந்திய தேவனாக நடிக்கும் கார்த்தியின் போஸ்டர் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் அதிகார பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது

இந்தப் படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம்,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.இந்த திரைப்படத்தை ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ,ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வருகிறான் சோழன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விளம்பர பனிகளுக்காக தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும் என்று ,மணிரத்தினத்தின் சமூக வலைதள பக்கங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது,அதனை தொடர்ந்து விக்ரம், மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஜெயம்ரவி ,ஐஸ்வர்யா ராய் ,திரிஷா போன்றவர்களின் கதாபாத்திர போஸ்டர் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது

Related Articles

Back to top button