கட்டுரை

அசோகர் கட்டுரை – Ashoka the Great Essay For Kids

அசோகர் கட்டுரை – Ashoka the Great Essay For Kids :- அசோகர் என்றழைக்கப்படும் அசோக வர்தனர் கிமு 273 இல் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த பேரரசர் ஆவார். பேரரசரான பிந்துசாரர் அவர்களின் ராஜ்ஜியத்தை அசோகர் தொடர்ந்து நல்வழியில் செலுத்தியவர் ஆவார்.ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தக்சிலா மற்றும் உஜ்ஜயினி பிரதேசங்களில் வைசிராயராக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

the ashoka pillar
Photo by grayom . on Pexels.com

நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் கல்வெட்டுகள் மூலமாகவும் அவர் பின்பற்றிய ஆட்சி முறைகளாலும் உலகளவில் அலெக்சாண்டருக்கு இணையான அரசர் என்ற பெயரை பெற்றுள்ளார் அசோகர்.

அவர் நடத்திய கலிங்கா போர் மிக மோசமான விளைவுகளை தனது நாட்டிற்கும் எதிரி நாட்டிற்கும் ஏற்படுத்தியதை உணர்ந்து தனது ஆட்சி முறையையும் தனது போர் நடைமுறைகளையும் மாற்றி உலகளவில் மாபெரும் அரசர் என்ற பெயரோடு அமைதியை போற்றிய அரசர் என்ற பெருமையையும் பெற்றார்அசோகர்

சிவ வழிபாட்டு முறைகளில் இருந்த அரசர் அசோகர் ,கலிங்கா போரின் தாக்கத்தினால் மனம் வருந்து பௌத்த மதத்தை பின்பற்ற தொடங்கியதா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து மக்களும் எனது குழந்தைகள் என்ற நிலைப்பாட்டை எடுக்க இது அவருக்கு உறுதுணையாக இருந்தது.

கலிங்க போரின் எதிர்மறை தாக்கத்தில் மனமுடைந்து போன அசோகர் உபகுப்தா என்ற பௌத்த துறவியின் கீழ் தீட்சை பெற்று,தொடர்ந்து அமைதி மார்க்கத்தின் வழியில் நடந்தார் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்

இருந்த போதிலும் தொடர்ந்து அவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் எல்லை விரிந்து கொண்டே சென்றது எனவும் குறிப்பிடுகின்றனர் ,பாடலிபுத்ரா வை தலைநகராக கொண்டு அவர் ஆட்சி செலுத்தியபோது ஹிந்து குஷ் மலை சாரலில் அமைந்துள்ள பல்வேறு நிலப்பரப்புகளும் ,ஆப்கானிஸ்தான் ,நேபால் ,காஷ்மீர் முதற்கொண்டும் ,தென் பகுதிகளான மைசூர் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது .இதனை பார்க்கையில் தற்போது இருக்கும் ஒன்றிணைந்த இந்தியாவின் நிலப்பரப்பை விட பெரிய நிலப்பரப்பை அவர் ஆட்சி செய்துள்ளார் என்பது நமக்கு விளங்குகிறது

பௌத்த மதத்தை பின்பற்ற துவங்கிய அசோகர் பௌத்த மதத்தின் புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்,குறிப்பாக கௌதம புத்தரின் பிறப்பிடம் ,ஞானம் பெற்ற கயா மற்றும் குஷிநகர் பகுதிகளுக்கும் ,லும்பினி புனித இஸ்தலத்திற்கும் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

அந்த புண்ணிய ஸ்தலங்களில் பௌத்த மடாலயங்களை நிறுவினார் ,தொடர்ந்து ஒரு பௌத்த துறவி போல் வாழ்க்கை முறையை அமைத்து கொண்ட அவர் ,புலால் உண்ணுவதை தவிர்த்தார் ,வேட்டையாடும் பழக்கத்தையும் அடியோடு நிறுத்தினார்

இருந்த போதிலும் நாட்டில் உள்ள மற்ற மதத்தினர் புண்படும் படியான செயல்களை அவர் செய்ததில்லை என்றும் அவரது வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் கல்வெட்டுகள் சான்றாக இருக்கின்றன . அமைதி மற்றும் அகிம்சாயை உலகம் முழுவதிலும் பரப்ப பௌத்தம் சார்ந்த சன்யாசிகளையும் தனது ராஜ்யத்தின் உயர்ந்தவர்களையும் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கு தூதுவர்களாக அனுப்பினார்.

இன்றளவும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் அசோகரின் கல்வெட்டு ஒன்றில் சாலைகள் தோறும் மனிதர்களுக்கும் ,விலங்குகளுக்கும் நிழல்தரும் புளிய மரங்களை நட ஆணையிட்டதும் , ஒன்பது மைலுக்கு ஒரு கிணறு வெட்டப்பட்டு தங்குவதற்கான சத்திரங்களையும் ஏற்படுத்தியதும் கடித வடிவில் குறிப்பிட பட்டுள்ளது

அசோகரை பற்றிய கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராகிருத பேச்சுவழக்கில் உள்ளது என்றும் , சில ஆப்கானிஸ்தான் கல்வெட்டுகள் கிரேக்க மொழியிலும் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் தெரிவிக்கிறது

தற்போது இந்திய அரசரின் முத்திரையாக நாம் பயன்படுத்துவது அசோகரின் நான்கு சிங்கங்கள் அடங்கிய தூணே ஆகும்.மேலும் அசோக சக்கரம் என்றழைக்கபடும் 24 ஆரங்களை கொண்ட சக்கரம் நமது தேசிய கொடியிலும் காணலாம். அசோகருக்கு பிறகு மௌரிய ஆட்சி 185 வரை வந்தது குறிப்பிட தக்கது

Related Articles

Back to top button