கட்டுரை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிறு கட்டுரை

இந்தியாவின் சுதந்திர  போராட்ட காலம் தொட்டே ஆன்மீகவாதியாகவும் சாதிப் பாகுபாட்டை  எதிர்ப்பவர் ஆகவும் இருந்தவர் முத்துராமலிங்கத்தேவர் அவர்களாவார். ஆங்கிலேயே அரசை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கியபோது தமிழகத்திலிருந்து பெருவாரியான இளைஞர்களை அனுப்பி வைத்த பெருமை இவருக்கு  உண்டு.

 இவர் பிறந்த ஊரான பசும்பொன்னில் ஆண்டுதோறும் இவரது பிறந்த தினத்தை தேவர் குருபூஜை என்ற விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்த நிகழ்வில் இன்றளவும் ஏராளமான தமிழக மக்கள் கலந்துகொண்டு வணங்கி வருகின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இந்தக் கட்சியை நேதாஜி அவர்கள் முத்துராமலிங்கத்தேவர் உடன் இணைந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி மதுரையில் காவல்துறை கைது செய்தது கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட இவர் இரண்டு வாரங்களில் சிறையை விட்டு  நீதி விசாரணைக்கு பின்வெளியேறினார்

முத்துராமலிங்கத் தேவர் தமிழ் இளம் காலம் தொட்டே முஸ்லிம் மக்களிடம் அதீத பற்று வைத்திருந்தார் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது கூட தமிழக முஸ்லிம் மக்கள் வெளியேற அனுமதி அளிக்கவில்லை அதற்குப் பதிலாக இங்கு இருந்த முஸ்லிம் கணக்கு பாதுகாப்பும் வழங்கினார் 

Related Articles

Back to top button