பங்கு சந்தை

பங்கு சந்தை LIVE 6/6/2024: உயரத்தில் தொடங்க போகும் நிஃப்டி , சென்செக்ஸ்

பங்கு சந்தை LIVE 6/6/2024: உயரத்தில் தொடங்க போகும் நிஃப்டி , சென்செக்ஸ் :- அரசியல் களத்தில் நிலையான அரசு அமையாத காரணத்தினால் தொடர்ந்து சமநிலை அடையாத இந்திய பங்கு சந்தை இன்று புதிய உச்சத்தை தொடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

stock exchange board
Photo by Pixabay on Pexels.com

பாஜாக ஆட்சி அமைத்திட நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு கையெழுத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய அணைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து ,நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க குடியரசு தலைவரின் ஒப்புதலை கோரும் செயலாக்கங்கள் நிறைவு பெற்று விட்டன

பாஜாக ஆட்சி ஆட்சி அமைக்கும் என்ற செய்தியின் காரணமாகவே கடந்த நான்காம் தேதி புதிய உச்சத்தை தொட்ட பங்கு சந்தை இன்று பாஜாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் செய்த காரியங்களினால் மீண்டும் புத்துணர்வு பெறுமா என்று பலதரப்பட்ட மக்களாலும் எதிர்பார்க்க படுகிறது

தொடர்ச்சியாக நல்ல செய்திகளே வந்த வண்ணம் உள்ளதாலும் ,FII இன்று BUY செய்யும் என்ற எதிர்பார்ப்பினாலும் இந்திய பங்கு சந்தை புதிய உச்சத்தை தொடலாம்

Back to top button