செயற்கை நுண்ணறிவு விளக்கப்படம்வல்கன் ஏவுதல் தோல்வி: அமேசானின் 40 செயற்கைக்கோள்கள் இழப்புஇணையச் சேவைக்கான செயற்கைக்கோள்கள் புவிச் சுற்றுப்பாதையை எட்டவில்லை
அமெரிக்காவின் புளோரிடாவில் நவம்பர் 15 அன்று ஏவப்பட்ட வல்கன் ஏவுகலத்தில் ஏற்பட்ட கோளாறால், அது சுமந்து சென்ற அமேசானின் 40 செயற்கைக்கோள்களும் இழக்கப்பட்டன.
ஏவிய சுமார் பத்து நிமிடங்களில் கோளாறு ஏற்பட்டதாக ஏவுதலை நடத்திய யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. கோளாறுக்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
இந்தச் செயற்கைக்கோள்கள் அமேசானின் லியோ இணையச் சேவைத் திட்டத்துக்காக அனுப்பப்பட்டன. அவை திட்டமிட்ட புவிச் சுற்றுப்பாதையை அடையவில்லை என்பதை அமேசான் உறுதிப்படுத்தியது.
