செயற்கை நுண்ணறிவு விளக்கப்படம் · சம்பவப் புகைப்படம் அல்லதுபாய் விமான நிலைய விரிவாக்கத்துக்குப் புதிய ஒப்பந்தங்கள்அல் மக்தூம் திட்டத்துக்கு 56.5 பில்லியன் திர்ஹம்
அல் மக்தூம் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்துக்குச் சுமார் 56.5 பில்லியன் திர்ஹம் மதிப்பில் புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நவம்பர் 26 அன்று அறிவித்தார்.
பயணிகள் முனையங்கள், போக்குவரத்து வசதிகள், சுரங்கப் பாதைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் இந்த ஒப்பந்தங்களில் அடங்கும்.
புதிய ஒப்பந்தங்களுடன், இதுவரை வழங்கப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு சுமார் 80 பில்லியன் திர்ஹமாகிறது என்று அமீரகச் செய்தி முகமை தெரிவித்தது.
Source: Khaleej Times
