எனது நண்பன் கட்டுரை – My Friend Essay in Tamil :- நல்ல நண்பனை உடைய ஒருவருக்கு போதும் துன்பம் தருவதில்லை என்ற பெரியவர்களின் சொல்லுக்கு இணங்க எனக்கும் ஒரு நண்பன் உண்டு
உன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன் என்ற பெரியோர்களின் சொல்படி என்னை பற்றி தெரிந்துகொள்ள என் நண்பனை கண்டாலே போதுமானதாகும். ஏனென்றால் எனது நண்பனின் நல்ல பழக்கவழக்கங்கள் எனக்கும் தொட்டுக் கொண்டு விட்டது எப்போதும் நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொண்டுவரும் எனது நண்பன் எனக்கு ஒரு ஆசானாகவே மாறிவிட்டான்.
முதன்முதலாக பள்ளி வகுப்பறையிலேயே நான் அவரை சந்தித்தேன். படிப்பில் எப்போதும் முதலாவதாக வரவேண்டும் என்ற எண்ணம் உடைய அவனது பழக்கவழக்கங்கள் என்னை அவன் பால் ஈர்த்தது. இதன் காரணமாகவே அவனை நான் எனது நண்பனாக ஏற்றுக் கொண்டேன். அவனது தந்தை ஒரு ஆசிரியர் என்பதை அறிந்து மிகவும் சந்தோசம் கொண்டேன். ஆசிரியரின் குழந்தைகள் எப்போதும் படிப்பில் கவனமாக இருப்பார்கள் அவருடன் இணைந்தால் எனது படிப்பும் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது
படிப்பு மட்டுமல்லாது நல்ல பழக்கவழக்கங்கள் அவனிடம் அதிகம் இருந்ததை எண்ணி நான் மிகவும் சந்தோசம் அடைந்தேன். மேலும் அவன் அதிகப்படியான விளையாட்டு உணர்வையும் கொண்டிருந்தான் மாணவர்கள் இணைந்தது பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டுக்கள் முதல் உடல் தகுதியை மேம்படுத்தும் விளையாட்டுக்கள் வரை அனைத்தும் அவனுக்கு அத்துபடி. பள்ளிகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் அவன் அதிகம் பங்குபெற்று மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ ஆரம்பித்தான். அவன் ஒன்றிணைந்த நண்பனான நான் அவனுடன் இணைந்து சில போட்டிகளில் பங்கு பெற்று என்னைப் பற்றி நானே சரியாக தெரிந்து கொள்ளாத காலத்தில் அவனது பேச்சை கேட்டு போட்டியில் பங்கு பெற்று சிலவற்றில் வெற்றியும் பெற்றேன். இது போன்ற விளையாட்டுகளில் எனக்கு தகுதி இருக்கிறதா என்ற எண்ணம் தவறு என்று அவர் சுட்டிக் காட்டி எல்லா போட்டிகளில் பங்குபெற என்னை ஊக்கப்படுத்தினார்
இதற்காக நான் எப்போதும் அவனிற்கு கடமைப்பட்டிருக்கிறேன் அவனது குடும்பம் ஒரு எளிமையான குடும்பம் என்பதை நான் அறிவேன் இருந்தபோதிலும் அவனது குடும்பத்தை பற்றி அவன் கூறும் செய்திகள் எனக்கு ஆச்சரியத்தை வழங்குகின்றன குறைந்த ஊதியம் உடைய அவனது தந்தையின் வருமானத்தில் அழகாக குடும்பம் நடத்தும் அவனது தாயை பற்றியும் நான் அறிந்து மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானேன்
எளிமையான உடை அணிந்து வரும் அவனைக் கண்டால் மரியாதையாக இருக்கும் எனது நண்பன் போல் அனைவருக்கும் நண்பர்கள் கிடைத்தால் அனைவரும் நல்லபடியாக தங்களது படிப்பை தொடர்வார்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு
எனது வாழ்க்கையில் அவனை நண்பனாக கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனது பெற்றோருக்கும் அவனை அறிமுகம் செய்து வைத்தேன் இதுபோன்ற நல்ல நண்பனை பெற்றதற்காக என்னையும் அவனையும் எனது பெற்றோர்கள் வாழ்த்தினார்கள்
இன்றைய நாகரீக சமுதாயத்தில் நண்பர்களால் பாதை தவறிப் போகும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக எனது தாய் தந்தையர் இப்போதும் என்னை எச்சரித்து வந்தனர் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் எனது நண்பனை எனது வீட்டில் அறிமுகம் செய்து வைத்தேன் அவனது நடவடிக்கைகள் மற்றும் குடும்பத்தின் பின்னணிகளை கேட்டு அறிந்து கொண்ட எனது பெற்றோர் அவனை நண்பனாக அடைந்ததற்கு என்னை வெகுவாக பாராட்டினார்கள்
இந்த நட்பானது எங்கள் பள்ளிப் படிப்பும் முடிந்தது தற்போது கல்லூரிப் படிப்பில் சேர்ந்து பயிலும் இந்தக் காலம் வரை தொடர்ந்து வருகிறது இது வாழ்க்கையின் பின் நாட்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனது நண்பனை பற்றி தெளிவாக உங்களிடம் கூறவே இந்த கட்டுரை வணக்கம்