செயற்கை நுண்ணறிவு விளக்கப்படம்மணிலா சென்றடைந்தார் பிரதமர் மோடிநவம்பர் 17 அன்று இரு உச்சி மாநாடுகளில் பங்கேற்பு
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புடனான மாநாடு மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16 அன்று பிலிப்பின்ஸின் மணிலா நகரைச் சென்றடைந்தார்.
மணிலாவில் வாழும் இந்தியர்களை மோடி சந்தித்தார். பிலிப்பின்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் இளையவர், மாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்கு அளித்த விருந்திலும் அவர் கலந்துகொண்டார்.
இரு மாநாடுகளும் நவம்பர் 17 அன்று நடைபெற உள்ளன. பொருளாதார ஒத்துழைப்பையும் போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்துவது குறித்துப் பேச விரும்புவதாக மணிலா புறப்படும் முன் மோடி தெரிவித்திருந்தார்.
