Site icon தின தமிழ்

நயன் அழகுசாதன பொருட்கள் : 9 Skin விரைவில்

தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நயன்தாரா , தற்சமயம் ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி உள்ளார் ,நீண்ட காலமாக நடித்து வரும் நயன்தாரா தனது சொந்த அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை துவங்க உள்ளார்

சில தினங்களுக்கு முன்பாக க்ரிதி சானொன் தனது பங்கிற்கு அழுகுசாதான பொருட்கள் தயாரிப்பை துவங்கியதை சினிமா ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆதரவு தெரிவித்து இருந்தனர் ,இந்த நிலையில் நயன்தாரா இந்த புதிய முன்னெடுப்பை துவங்கி இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பே நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கினார்,அதில் தனது இரட்டை குழந்தைகளை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி இருந்தார் ,நயன்தாரா

அந்த பக்கத்தில் இன்று நயன்தாரா தனது 9 SKin என பெயரிடப்பட்ட அழகுசாதன பொருட்களின் பெயரையும் ,அதன் வலைத்தளத்தையும் பகிர்ந்துள்ளார் .

Exit mobile version