Site icon தின தமிழ்

தங்கலான் திரைப்படத்தின் டீசர் இன்று யூட்யூப் வலைத்தளத்தில் வெளியானது

தங்கலான் திரைப்படத்தின் டீசர் இன்று யூட்யூப் வலைத்தளத்தில் வெளியானது, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் தயாரிப்பாளருமான பா ரஞ்சித் அவர்கள் நேற்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் நீண்ட நேரம் உரையாற்றினார். 

நடிகர் விக்ரம் பற்றியும் மாளவிகா மோகனம் பற்றியும் அதிக நேரம் பேசிய இயக்குனர் ரஞ்சித் அவர்கள் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா அவர்களைப் பற்றியும் முக்கிய கருத்துகளை கூறினார்.இந்த டீசரில் பா ரஞ்சித் அவர்களின் தனித்துவமான சினிமா கலைநயம் தென்படுகிறது.

வித்தியாசமான தோற்றத்தில் தங்களானாக நடிக்கும் விக்கிரமம் தவிர்த்து முக்கிய நடிகையான மாளவிகா மோகனின் ஆகியோரின் அடையாளம் மட்டுமே டீசரில் தெரிகிறது மற்றபடி அனைத்து நடிகர்களும் புதியவர்களாகவே இருக்கின்றனர். 

தயாரிப்பாளரின் வேண்டுதலுக்கு இணங்க நிறைய மாறுதல்களுடன் இந்த டீசர் தயாரிக்கப்பட்டு வெளியிட்டிருப்பதாக இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நேற்று நடைபெற்ற டீசர் வெளியிட்ட விழாவில் கூறியிருந்தார். அதன்படி சாதாரண திரைப்படமாக இல்லாமல் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் அளவிற்கு டீசர் இடம்பெற்றுள்ளது

Exit mobile version