Site icon தின தமிழ்

உடற்பயிற்சி கட்டுரை – Exercise Essay in Tamil

உடற்பயிற்சி கட்டுரை – Exercise Essay in Tamil :- உடற்பயிற்சி என்பது நமது உடலையும் மனதையும் வழுவுற செய்யும் மிக முக்கியமான பயிற்சியாகும் . இயந்திரமயமான இந்த அறிவியல் யுகத்தில் நாம் மிக மிக சிறிய உடல் வேலைகளையே செய்கிறோம் ,இதன் காரணமாக நமது உடலில் வியர்வை வெளியேறுதல் , கொழுப்பு கட்டுப்பாடு ,ஜீராணம் போன்ற செயல்களில் இடற்பாடு ஏற்படுகிறது , மேலும் மனதளவில் ஏற்படும் அழுத்தத்தையும் போக்க முடிவதில்லை, இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக அமைவது உடற்பயிற்சியே ஆகும்

Photo by Ketut Subiyanto on Pexels.com

உடற்பயிற்சி நன்மைகள்

உடற்பயிற்சியும் உடல்நலமும்

உடல் நலத்தை பொறுத்தவரை உணவே மிக சிறந்த மருந்தாகவும் ,அத்தகைய உணவை நாம் எடுத்துக்கொள்ளும் விதம் இன்று மாறிவிட்டது ,துரித உணவுகள் ,பொறித்த உணவுகள் என நாம் உட்கொள்ளும் உணவை நாமத்து உடல் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதிர்கிற தொடர் உடற்பயிற்சி அவசியமாகிறது

உடற்பயிற்சி வகைகள்

ஏரோபிக் உடற்பயிற்சி,உடல் வலிமை பயிற்சி,ஆசனம் ,நீட்சி என நான்கு பெரு வகைகளாக உடற்பயிற்சியை பிரிக்கலாம்

ஏரோபிக் உடற்பயிற்சி

நின்ற இடத்தில குதித்தல் ,தாவுதல் ,போன்ற அசைவுகளின் மூலமாக செய்யும் உடற்பயிற்சியை இது குறிக்கிறது ,இதயத்திற்கு அதீத நலனை இது கொடுக்கிறது

உடல் வலிமை பயிற்சி

உடல் எடையை பயன்படுத்தி தொங்குதல் , அமர்ந்து எழுதல் ,போன்ற செயல்களை இது குறிக்கிறது ,மேலும் உடற்பயிற்சி கூடங்களில் அதிக எடையை தூக்கும் உடற்பயிற்சியும் இந்த வகையில் சேரும்

ஆசனம்

மன அமைதிக்காகவும் ,உடலை சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளவும் யோகாசனம் போன்ற உடற்பயிற்சிகள் செய்யப்படுகின்றன ,தொடர்ந்து வேலைசெய்பவர்கள் இருந்த இடத்திலேயே இந்த பயிற்சி மூலமாக நலம்பெற முடியும்

நீட்சி

தொடர்ந்து ஒரே இடத்தில அமர்ந்து இருக்கும் அலுவலக பனி செய்பவர்களுக்கு இது உகந்தது ,குறிப்பாக முதுகு தண்டுவடத்தை நீட்சி செய்து , எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது ஏற்படும் திரவங்கள் சரிவர சுரக்க இந்த உடற்பயிற்சிகள் உதவுகின்றன

உடற்பயிற்சியின் அவசியம்

அறிவியல் யுகத்தில் மனிதன் வாழும் முறை மாறிக்கொண்டே வருகிறது ,பொதுவாக நடக்கும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது ,இந்த சமயத்தில் உடற்பயிற்சியை தினம்தோறும் மேற்கொள்ளும் ஒருவராலேயே தனது மனதையும் உடலையும் சரிவர பேணி பாதுகாக்க இயலும் இந்த கால அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித உழைப்பை சுருக்க பயன்பட்டாலும் மனித உழைப்பு குறைந்த காரணத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கணிசமான அளவு வுயர்த்தியே உள்ளன என்பதில் மாற்று கருத்து இல்லை ,எனவே நவீன உலகில் வாழும் நாம் தொடர்ந்து எதாவது ஒரு உடற்பயிற்சயாயோ அல்லது சிறு விளையாட்டையோ தொடர்ந்து செய்து வர வேண்டும்

Exit mobile version