நல்ல பொழுதுபோக்கு நேரத்தைச் செலவிடும் குழந்தைகள் பின்னாட்களில் நேரம் சம்பந்தமான பிரச்சனைகள் இன்றி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் எனவே ஒவ்வொரு குழந்தையும் தனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு தங்களுக்கு சில நன்மைகளையும் செய்யும்விதமாக பார்த்துக் கொள்வது அவசியமாகும்
ஒவ்வொருவரும் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஒரு பொழுதுபோக்கு மூன்றையும் தனது மன நலம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒரு பொருளுக்கு ஒன்றும் வைத்திருத்தல் அவசியம் என்பது எனது பெற்றோர்கள் கூறினார்கள் அதன்படி எனது பொழுதுபோக்கு நேரங்களில் நான் மேற்கொள்ளும் சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
நண்பர்களுடன் இணைந்து தினமும் கபடி விளையாட்டு விளையாடுவது எனக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாகும் தினமும் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான் உடற்பயிற்சி செய்வது கிடையாது அதற்கு பதிலாக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சிறு விளையாட்டுகளில் ஈடுபடுவது உண்டு நான் வசித்து வருவது ஒரு நகரம் சார்ந்த ஒரு கிராமம் ஆகும் எனவே இங்கு விசாலமான விளையாட்டு மைதானங்கள் கிடையாது இருந்தபோதிலும் எங்கள் வீட்டில் அருகில் உள்ள அரசு நிலத்தில் சிறிய கபடி மைதானம் நானும் என் நண்பர்களும் அழைத்துள்ளேன் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது கபடி விளையாடுவது எங்களுக்கு பொழுது போக்கு அம்சமாக இருக்கிறது தினமும் விளையாடுவதால் உடற்பயிற்சிக்கு செலவிடும் உடலுழைப்பு இந்த விளையாட்டில் செலவிடுகிறோம் இதனால் எங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது
விளையாட்டுக்கு அடுத்தபடியாக டிவி பார்த்தல் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு ஆகும். முதலில் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு வந்த நான் சில காலங்களுக்கு பிறகு எனது பெற்றோர்களின் சொல்படி டிவி பார்த்தல் என்பதை ஒரு பொழுதுபோக்கு நேரம் என்பதைத் தாண்டி அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு நிகழ்வாக மாற்றிக்கொண்டு விட்டேன் குறிப்பாக செய்திகளை கூர்ந்து கவனிக்கும் பழக்கமும் எனக்கு வந்து விட்டது இதன் காரணமாக உலக நடப்புகளை தெரிந்து கொள்கிறேன் உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொலைக்காட்சி செய்திகள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன மேலும் தற்போதுள்ள சினிமா காலகட்டத்தில் சினிமா பார்த்து அதை தவறு என்று எனது பெற்றோர்கள் எப்போதும் கூறுவது கிடையாது ஆனால் அதை குறுகிய காலத்திற்குள் முடித்துக்கொள்ள வேண்டும் எனது என் பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள் அதற்கிணங்க சிறிதுநேரம் பல்சுவை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும் எனக்கு அனுமதி உண்டு அதன் பிறகு அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும் குறிப்பாக விலங்குகளைப் பற்றியும் பூமி உருவான கதைகள் பற்றியும் தொடர்ந்து வெளியிட்டு வரும் தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சிகளை மிகவும் நேசித்து பார்க்கிறேன் இத்தகைய பொழுதுபோக்கு அம்சங்களை நான் பின்பற்றி வருவதால் எனக்கு தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்திற்கு தடையேதும் கூறுவதில்லை எனது பெற்றோர் தொலைக்காட்சி பார்ப்பதை நெறிப்படுத்தும் முறைகளை எனக்கு சொல்லிக்கொடுத்த எனது பெற்றோர்களுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்
ஒவ்வொருவரும் இதுபோன்று ஏதாவது ஒரு பொழுதுபோக்கை பின்பற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் சிறு நேரங்களை உபயோகமாக செலவிட வேண்டும் என்பது எனது ஆவல் ஆகும்